தளத்தைப் பற்றி


முதல் மற்றும் முக்கியமான விஷயம் - இது லாப நோக்கில் நடத்தப்படும் வியாபாரமல்ல.


என்னுடைய சிறிய நூலகத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியே. இது போல இன்னும் நிறைய பேர் தங்கள் நூலகங்களைப் பகிர்ந்து கொண்டால் இந்த உலகத்தில் சிறந்த நூல்களை தடையற்று கிடைக்கும் என்பது என் நம்பிக்கை. 

இதே போல இன்னும் பலரும் தங்கள் நூலகங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் - அப்படி செய்தால் ஒரு மிகப்பெரிய புத்தக வலையை ஏற்படுத்தலாம். அந்த வலையில் மிகவும் தரமான புத்தகங்கள் எளிமையாக கிடைக்கும். 

அவரவர் ரசனைக்கேற்ப first hand review-உடன் நூல்கள் கிடைக்கும். ஒரு மிகப்பெரிய virtual book club உருவாகும். கொஞ்சம் அதிகப்படியான கற்பனை தான் :-)

இதை செய்ய வேண்டும் என்று ஆசையாக வெளிப்படுத்தாமல் முதல் கல்லை நானே நகர்த்த விரும்பினேன். அதன் விளைவை தான் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
என்னுடைய நூலகத்திற்கு உங்களை நான் வரவேற்கிறேன்.

0 விமர்சனங்கள்: