இது எப்படி இயங்கும்

உங்களுக்கு புத்தகம் பிடிக்குமா ? எனக்கும். எந்த மாதிரி புத்தகம் - எனக்கு எல்லா விதமும்.

புத்தகங்களை வாடகைக்கு எடுத்துப் படிக்க இந்த தளத்தை நான் உருவாக்கியிருக்கிறேன். இந்த புத்தகங்கள் அனைத்தும் என்னுடைய சிறிய நூலகத்தில் இருப்பவை. என்னுடைய ஆன்மிக புத்தகங்களையும், நான் படித்து கிழித்த (Ayn Ran நாவல்கள் பக்கம் பக்கமாக இருக்கின்றன) நாவல்களையும், நான் தற்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களையும் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. ஒரு வேளை எதிர்காலத்தில் அதையும் செய்யலாம்.

இந்த புத்தகங்கள் என் ரசணை சார்ந்தவை - அதனால் உங்களுக்குத் தேவையான எல்லா புத்தகங்களும் இங்கே கிடைக்கும் என்ற உத்திரவாதத்தை நான் தர முடியாது. ஆனால் என் ரசணை விரிய விரிய அது உங்களுக்கும் கிடைக்கும்.

 இதற்கும் பிற வாடகை நூல் நிலையங்களுக்கும் இருக்கும் முக்கியமான வித்தியாசம் - நீங்கள் முன்பணம் (Advance Deposit) எதுவும் தர தேவையில்லை. வாடகை மட்டும் தந்தால் போதும். அதுவும் மிகவும் குறைந்த வாடகை. இதற்கு கீழ் வேறெங்கும் கிடைக்காது என்ற நம்பிக்கை இருக்கிறது. 

யாராவது ஏமாற்றி விட்டு ஓடிவிட்டால் என்ன செய்வீர்கள் ? என் அனுபவத்தில் மூன்றில் இரண்டு பங்கு பேர் ஒழுங்காக புத்தகத்தை திருப்பி தந்து விடுகின்றனர்.  மிக நல்ல புத்தகங்களில் சிலவற்றை கடனாக கொடுத்து திரும்பி கிடைக்காமல் ஏமாந்த அனுபவமும் எனக்கு உண்டு. Holy blood holy grail அந்த வகையில் ஒன்று.

மீதி இருக்கும் ஒரு பங்கின் மீது கவனம் செலுத்தி இரண்டு பங்கு மக்களை அவமானப்படுத்துவானேன் ?

வாடகையும் குறைவாக இருக்க காரணம் - இது லாப நோக்கில் செய்யப்படுவது அல்ல. நிறைய பேருக்கு நிறைய புத்தகம் எளிதாக கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.  அதற்கான சாத்தியக்கூறுகளும் நிச்சயம் இருக்கவே செய்கின்றன என நான் நம்புவதால் இந்த சோதனை முயற்சி.


புத்தகம் இருக்கிறதா இல்லையா என்பது போன்ற தகவல்களை நீங்கள் இணையத்திலேயே பார்த்துக் கொள்ளலாம். என்னை மின்னஞ்சலிலோ, ட்விட்டரிலோ தொடர்பு கொள்ளலாம். நான் சென்னையில் இருப்பதால் இந்த சேவை தற்போது சென்னையில் மட்டுமே - எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது :-)


புத்தகத்தை பரிமாறிக்கொள்ள நாம் நேரில் தான் சந்திக்க வேண்டும் (இல்லாவிட்டால் சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் ஆகிவிடும்). தவிர்க்க முடியாத காலத்தில் போஸ்டலிலோ கூரியரிலோ அனுப்பலாம். தப்பில்லை.

சென்னை அடையாறு, பெசண்ட் நகர் பகுதிகளில் இருப்பவர்களுக்கு வார இறுதியில் door delivery என்னால் செய்ய முடியும். பிற பகுதி மக்கள் என்னைத் தேடி தான் வர வேண்டும் - இல்லையேல் ஒரு பொது இடம் :-) வேறு வழியில்லை.

இந்த சேவையில் உங்களுக்கு புத்தகத்தை கொடுக்கவோ மறுக்கவோ எனக்கு முழு உரிமையும் உண்டு - புத்தகங்களை நல்ல முறையில் திருப்பித் தரும் கடமை உங்களுக்கு. அப்படி செய்யாவிட்டால் இரண்டாவது முறை என்னிடம் புத்தகத்தை எதிர்பார்த்து ஏமாற வேண்டாம் :-)

பார்ப்போம் - இதை எவ்வளவு தூரம் செய்ய முடிகிறதென்று. இது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சி.

0 விமர்சனங்கள்: